கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய குடித்து 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், இதில் திமுக நிர்வாகிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
திமுக நிர்வாகிகளுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம்maharaja8th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: அரசுக்கு வந்த கோரிக்கை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்?இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்," கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்திருக்கிறது. 50-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது.
கள்ளச்சாராய வணிகத்தை தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதும், காவல்துறை கண்காளிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் சரியான நடவடிக்கை தான் . ஆனால், இது போதுமானதல்ல. கள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளச்சாராய சாவுகளுக்கு முக்கியக் காரணம் அங்குள்ள கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு திமுகவினர் கொடுத்த ஆதரவு தான்.
கல்வராயன்மலையில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சி, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விற்கப்படுகிறது. அதற்கு காரணமானவர்களை காவல்துறையினர் கைது செய்தாலும் கூட, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள எ.வ. வேலுவின் ஆதரவாளரான ரிஷிவந்தியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் உள்ளிட்டோர் தலையிட்டு அவர்களை விடுதலை செய்ய வைக்கின்றனர். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.
கடந்த ஆண்டு மரக்காணம் பகுதியில் நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான சாராய வியாபாரி மருவூர் இராஜாவுடன் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மஸ்தானுக்கு நெருங்கிய உறவு இருந்தது அம்பலமானது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளில் சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்பவருக்கும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பது இப்போது உறுதியாகியுள்ளது.
Anbumani Ramadoss DMK Leaders Involvement கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் அன்புமணி ராமதாஸ் அறிக்கை அன்புமணி ராமதாஸ் லேட்டஸ்ட் அறிக்கை Kalakurichi Tragedy DMK Links PMK Leader Anbumani Ramadoss Kalakurichi Illicit Liquor Probe Kalakurichi Liquor Tragedy Investigation Anbumani Ramadoss Statement Illicit Liquor In Tamil Nadu Kalakurichi Liquor Deaths 2024
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு : முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்Edappadi Palaniswami : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
Read more »
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: ரூ. 10 லட்சம் நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புKallakurichi Illicit Liquor Case: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 34 பேர் உயிரிழந்த நிலையில், இதில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more »
கள்ளக்குறிச்சி சம்பவம்: அரசின் அலட்சியப்போக்கே உயிரிழப்புக்குக் காரணம்Kallakurichi Liquor Death: கள்ளக்குறிச்சியில் பலரின் உயிரைப்பறித்துள்ள கள்ளச்சாராய விவகாரத்தில் இயக்குனர் பா ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read more »
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : பாமக கனவை தவிடுபொடியாக்க களத்தில் குதித்த திமுகவின் தளபதிகள்விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என அமைச்சர் பொன்முடி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
Read more »
கள்ளக்குறிச்சியில் பலி எண்ணிக்கை உயர காரணம் என்ன? முன்னாள் ஆட்சியர் சொன்ன அந்த ஒரு வார்த்தைKallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் பலி எண்ணிக்கை உயர்ந்ததற்கு முக்கிய காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
Read more »
கள்ளக்குறிச்சி விவகாரம்: 33 பேர் மரணம்... உயரும் பலி எண்ணிக்கை! நிவாரணம் அறிவிக்கப்படுமா?Kallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
Read more »