10 லட்சம் பணம் கொடுக்காததால் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை ஆந்திரா வங்கி மேலாளர் பறித்து வேறு நபருக்கு கொடுக்க முயல்வதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.
10 லட்சம் ரூபாய் கடனுக்கு 5 கோடி ரூபாய் சொத்தை பறிமுதல் செய்ய முயற்சி! தனியார் வங்கி மேனேஜர் மீது புகார்
தனியார் வங்கி மேலாளர் மீது புகார்Lord ShaniElectricity Billகோவை காளப்பட்டி நேரு நகரை சேர்ந்த வெள்ளிங்கிரி என்பவரது மகன் மகாலிங்கம் . இவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் மகாலிங்கம் தனக்கு சொந்தமான நேரு நகர் பகுதியில் உள்ள நிலத்தை தனுது நண்பர் மனோகரன் தொழில் செய்வதற்காக கேட்டு கொண்டதற்கிணங்க பத்திரத்தை வழங்கியதாகவும், அதனை மனோகரன் திருப்பூரில் உள்ள ஆந்திரா வங்கியில் மகாலிங்கத்தின் நிலத்தை அடமானம் வைத்து 85 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே ஆந்திரா வங்கி மேலாளர், மதுரை பாபு என்பவரருடன் இணைந்து மோசடி செய்த்தோடு 10 லட்சம் பணம் கொடுத்தால் தனது நிலப்பத்திரங்களை தந்துவிடுவதாகவும், அதற்கு தான் மறுத்தாகவும் கூறியுள்ள மகாலிங்கத்தின் மனைவி மஞ்சுளா, கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வழக்கு தங்களுக்கு சாதகமாக வந்த்தாகவும் தெரிவித்தார்.
தற்போது டி.ஆர்.ஏ.டி நோட்டீசின் படி தங்களை வெளியேறுமாறு கூறியுள்ளதாகவும், இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகோண்டதோடு, தற்போது நீதிமன்ற விடுமுறை காலம் என்பதால் தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து இந்த புகார் குறித்து கோவை மாவட்ட காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Private Bank Manager Land Expropriation Rs 5 Crore Police Complaint Land Fraud கோயம்புத்தூர் தனியார் வங்கி நில அபகரிப்பு 5 கோடி ரூபாய் நிலம் அபகரிக்க முயற்சி கோவை மாவட்ட காவல்துறை கோவை மாநகர காவல்துறை வங்கி கடன் மோசடி
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
தாம்பரம்: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
Read more »
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி சிக்கிய விவகாரம்…. பாஜக பிரமுகர் வீட்டில் அதிரடி சோதனைCBCID Police Raid BJP MLA Nayanar Nagendran s Associate s House : தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நீலாங்கரையில் உள்ள பாஜக பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
Read more »
4 கோடி ரூபாய் பறிமுதல் வழக்கு : பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சிக்கிய முக்கிய தடயம்லோக்சபா தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு எதிரான முக்கிய தடயம் சிக்கியுள்ளது.
Read more »
10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்தால் சட்ட நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கைKallakurichi Collector : 10 ரூபாய் நாணயம் வாங்க மறுக்கும் கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Read more »
7.5 கோடியை அபகரிக்க முயன்ற வங்கி மேலாளர்... சென்னையில் அதிர்ச்சிChennai Crime News: சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த மூத்த குடிமக்கள் டெபாசிட் செய்த 7.5 கோடி ரூபாய் போலி செக் மூலம் அபகரிக்க இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read more »
5 ரூபாய் குர்குர்ரே வாங்கித் தராததால் விவாகரத்து... கணவனுக்கு ஷாக் கொடுத்த மனைவி!Bizarre News: 5 ரூபாய் மதிப்பிலான குர்குர்ரே பாக்கெட்டை வாங்கி தராததால் தனது கணவனிடம் விவாகரத்து கேட்டு மனைவி புகார் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more »